இலங்கையர்களின் தானத்தால் உலகை பார்க்கும் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள்
இலங்கையர்களின் கண் தானத்தினால் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் உலகை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இலங்கைப் பிரஜைகள் செய்த கண் தானம் காரணமாக 87,870 வெளிநாட்டவர்கள் பார்வையை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கை கண் தான சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதரராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
தானம் செய்யப்பட்ட கண்களைக் கொண்டு இலங்கையைச் சேர்ந்த 58,260 பேர் பார்வையை பெற்றுக்கொண்டுள்ளனர்.
சுய விருப்பின் அடிப்படையில் கண் தானம்
இலங்கையைச் சேர்ந்த 21 லட்சம் பேர் சுய விருப்பின் அடிப்படையில் கண் தானம் செய்யும் உறுதிமொழியை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்து குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் கண்களை தானமாக பெற்றுக்கொள்ள கண் தான சங்கத்தின் கிளைகள் நாடு முழுவதும் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கண் தானம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டாலும் கண்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள 30,000 முதல் 40,000 ரூபா வரையில் செலவாகின்றது என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு கண்களை வழங்கும் போது 50,000 முதல் 80,000 ரூபா வரையில் செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
