சீரற்ற காலநிலை : பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 192 பேரை இதுவரை காணவில்லை.
இன்று நண்பகல் 12 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பதிவாகியுள்ள இறப்புக்கள்
மேலும், 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam