ஒரே நேரத்தில் மீட்கப்பட்டுள்ள 22 பேரின் சடலங்கள்! பதைபதைக்க வைக்கும் நிலவரம்
மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மினிப்பே - நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன.
கடும் துயரம்...
இதன்படி, குறித்த 12 வீடுகளில் இருந்தும் 30 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தவர்களில் 22 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam