இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்
உணவுப் பணவீக்கமானது கடந்த நவம்பரில் 3.0 சதவீதத்திற்கு குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் உணவு பணவீக்கமானது 3.5 சதவீதமாக பதிவாகியிருந்தது.
அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஒக்டோபரில் 1.4 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில் நவம்பர் மாதத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாதத்திற்கு மாதம் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2025 நவம்பரில் 0.23 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இதற்கு, உணவு வகைகள் -0.18 சதவீதப் புள்ளிகளினால் பங்களித்ததுடன் உணவல்லா வகை -0.05 சதவீதப் புள்ளிகளால் பங்களித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri