இலங்கையை நிலைகுலையச் செய்துள்ள இயற்கை! மீட்பு பணியில் வெளிநாட்டவர்களும்..
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முப்படையினர் மற்றும் தன்னார்வளர்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மன்னுள் புதையுண்டு போனவர்கள் மற்றும் நீரால் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள்..
இந்த நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படையினரோடு பல வெளிநாட்டவர்களும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள பல சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு மீட்பு நடவடிக்கையில் படையினர் மற்றும் இலங்கை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

மேலும், இலங்கைக்கு சுற்றுலா வருகைத் தந்த பல வெளிநாட்டுப் பயணிகள் சீரற்ற காலநிலையின் காரணமாக பல இடங்களில் சிக்குண்டிருந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக மீட்டு திருப்பி அனுப்பும் நடவடிக்கையிலும் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளின் கண்காணிப்பின் ஊடாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam