நீடிக்கப்பட்டது பதவிக்காலம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான இறுதி அறிக்கையை பூர்த்தி செய்வதற்காக ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு நியமனம்
இதற்கு முன்னர் பல தடவைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து, விசாரித்து அறிக்கை அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஜனவரி 21ஆம் திகதி இந்த ஆணைக்குழுவை நியமித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலையிலான இந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதியும், இரண்டாவது அறிக்கை 2022 பெப்ரவரி 18ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
