பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
உயிரிழந்தவர்களை நினைவு கூறியதாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்ட 10 நபர்களுக்கு விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் அவர்கள் முன்னிலையில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்குக்குச் சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் மற்றும் சுகாஸ் உட்பட 7 சட்டத்தரணிகள் இன்று ஆஜராகியிருந்தனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட 10 நபர்களினதும் சமர்ப்பணத்தைச் சமர்ப்பிப்பதற்கான வேண்டுகோளைக் நீதிபதி அவர்களுக்குக் கோரியதற்கு இணங்க எதிர்வரும் 13 ஆம் திகதி குறித்த சமர்ப்பணத்தைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தின் நிலவிவரும் கோவிட் அதிகரிப்பு காரணமாக இன்றைய தினம் கைது செய்யப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
