சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் நீட்டித்துள்ள நாடு
கோவிட் தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தாக்கம் குறைந்த போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது இந்தியாவில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri