நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு
உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்தத் திட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி செயல்படுத்தப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி விவாதிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு சமீபத்தில் கூடியது.
பொதுமக்களின் கருத்து
அப்போது, தொடர்புடைய முன்மொழிவைச் செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை விடுக்கவும், இந்த விடயம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறவும் ஒரு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் வரும் 4ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கலந்துரையாடலுக்குப் பிறகு தொடர்புடைய பொதுக் கருத்துக் கணிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த முன்மொழிவு பற்றி விவாதிப்பதற்காக ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்ட நீதிச் சேவை சங்கமும் தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் செயற்குழு, இந்த விசேட பொதுக் கூட்டத்தை 11ஆம் திகதி கூட்ட முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam