மட்டக்களப்பில் விவசாய காணியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்களானது இன்று (05.04.2024) காலை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள்
விவசாய காணியில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக நீர் குழாய் பொருத்தும் முகமாக குழியொன்றினை வெட்டிய போது பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவம் தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள 233ஆவது வாகரை இராணுவப் படைப் பிரிவிலுள்ள இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தன் பின்னர் கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் அவற்றினை மீட்டு வாகரை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நடவடிக்கையின் போது 81 மோட்டார் துப்பாக்கி அதற்கு பொருத்தும் பரல்-1, பை போட்-1, வேஸ் பிளேட்-1 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
