மட்டக்களப்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சுகளும், அமோனியம் நைத்திரேட் 25 கிலோகிராம் நிறையுடைய 24 பைகள், வெடி பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள், 31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri