யாழ். வடமராட்சியில் பெருமளவில் வெடிபொருட்கள்- ஆயுதங்கள் மீட்பு (Photos)
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றைய தினம் (23.07.2023) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் நீல நிற பிளாஸ்டிக் எண்ணெய் பரல் ஒன்றில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இயங்கு நிலை துப்பாக்கி
இதன்போது மீட்கப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கி என்பன உயிர்த்த்துடிப்புடன் இயங்கு நிலையில் காணப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்போது ரி- 56 ரக துப்பாக்கி இரண்டு, அதற்கான மகசின் எட்டு, 30 பொட்டிகளில்
அடைத்து வை வைக்கப்பட்டிருந்த 750 தோட்டாகள் மற்றும் 82 ரக கையெறிகுண்டு - 08
என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் விசாரணை
இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வெடிபொருட்கள் போர்காலத்தில் புதைத்து
வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam