உக்ரைன் துறைமுகத்தில் இரண்டு ஏவுகணை தாக்குதல்: ரஷ்ய அதிகாரிகள் மறுப்பு
உக்ரைன்- ஒடேசா நகரில் இன்று அதிகாலை இரண்டு ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கியேவ் மற்றும் மாஸ்கோ அதிகாரிகள் உக்ரேனில் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் பல மாதகால சண்டைக்குப் பிறகு ஐ.நா.வால் "நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக" பாராட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அடுத்த நாளே இத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.
ஒப்பந்தத்தில், தானிய ஏற்றுமதிகள் போக்குவரத்தில் இருக்கும்போது துறைமுகங்களை குறிவைக்க மாட்டோம் என்று ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், ரஷ்யா ஒப்புக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மறுப்பு
இந்நிலையில், துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர், ரஷ்ய அதிகாரிகள் இத் தாக்குதல்களை மறுத்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
"ரஷ்யாவுடனான தொடர்பில், ரஷ்யர்கள் எங்களிடம் இந்த தாக்குதலுடன் முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் பிரச்சினையை மிக நெருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து வருகின்றனர்" என்று ஹுலுசாய் அகர் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தை அலட்சியம் செய்யும் ரஷ்யா
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஜோசப் பொரெல், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை “ரஷ்யா அலட்சியம்" காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
"இஸ்தான்புல் ஒப்பந்தங்கள் கையெழுத்தான ஒரு நாளுக்குப் பிறகு தானிய ஏற்றுமதிக்கு முக்கியமான இலக்கைத் தாக்குவது குறிப்பாகக் கண்டிக்கத்தக்கது" என்று அவர் ருவிட்டர் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
EU strongly condemns Russian missile strike on Odesa’s seaport. Striking a target crucial for grain export a day after the signature of Istanbul agreements is particularly reprehensible & again demonstrates Russia’s total disregard for international law & commitments#StopRussia
— Josep Borrell Fontelles (@JosepBorrellF) July 23, 2022
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் தாக்குதலை "கடுமையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.