வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு ஒலனா ஸெலன்ஸ்கி கோரிக்கை
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலனா ஸெலன்ஸ்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
‘துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்கிறேன்’என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,