இலங்கையில் அடுத்தடுத்து தொடரும் வெடிப்பு சம்பவங்கள்!அச்சத்தில் மக்கள் (Video)
நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக பல வெடிப்பு சம்பவங்களை செய்திகள் வாயிலாக காணக்கூடியதாக இருக்கிறது.
இவற்றில் பெரும்பாலானவை சமையல் எரிவாயு சிலிண்டர்களினால் ஏற்றப்பட்ட வெடிப்பாகவே காணப்படுகின்றன.
முந்தய காலங்களிலும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் ஏற்றப்பட்டிருந்த போதிலும் அண்மை காலமாகவே இவ்வாறான சம்பவங்களை தொடர்ச்சியாக காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் நவம்பர் மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் 5 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
கொழும்பு, கண்டி, வெலிகம, கொட்டாவ, பன்னிப்பிட்டய, நிக்கவெரட்டிய போன்ற பகுதிகளிலே குறித்த வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில் கடந்த 24ஆம் திகதி திம்புலாகல பகுதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொலன்னறுவை, வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது விஷேட காணொளி,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
