ருமேனியா எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி.! 33 பேர் படுகாயம்
ருமேனியா எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.
ருமேனியாவின் புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்திலேயே நேற்று இரண்டு வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
சாலைப்போக்குவரத்து தடை
இந்த எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியதனால் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இதனால் சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதுடன்,மாலையில் இரண்டாவதும் வெடி விபத்து ஏற்பட்டது
இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மூன்றாவதாகவும் வெடி விபத்து ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
