நாட்டின் பல பகுதிகளில் இன்று வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு (Photos)
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சமையலறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாமடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் சமையலறையில் இருந்த எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்த வீட்டார் உடனடியாக எரிவாயு உருளையை அடுப்பில் இருந்து அகற்றி வீட்டிற்கு வெளியே கொண்டு சென்றதுடன், நீரினைப் விசிறி தீயிணைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவத்தினால் வீட்டில் உள்ள எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும், சமையலறையில் இருந்த சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் நெடுங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடியில் வீடொன்றில் வெள்ளிக்கிழமை (17) இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
புதிய காத்தான்குடி விடுதி வீதியின் இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றிலேயே இந்த அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த வீட்டில் வீட்டார் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த அடுப்பு வெடித்ததாக தெரிவித்தனர்.