விடுதலைப் புலிகளின் தலைவரது படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்! யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை கைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்க மறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (7) உத்தரவிட்டது.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உமுற்படுத்தப்பட்டார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது ‘பி’ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.
வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை வரும் ஏப்ரல் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan