மனித உரிமைகள் பிரச்சினையில் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கம்
இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் பிரச்சினையில் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்திற்கு நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) நேற்று வெளியுறவு அமைச்சக கேட்போர் கூடத்தில் இராஜதந்திர சமூகத்துக்கு இந்த தெளிவூட்டலை மேற்கொண்டுள்ளார்.
மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி முயற்சியைத் தொடர்ந்து, நாட்டில் கோவிட் நிலைமை மேம்பட்டுள்ளது.
கடுமையான சவால்கள் இருந்த போதிலும், மக்கள் தொகையில் 70%க்கும் அதிகமானோர் தற்போது முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக நாட்டைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இராஜதந்திர சமூகத்தின் ஒத்துழைப்பை அமைச்சர் கோரினார்.
இதேவேளை உள்நாட்டுச் செயல்முறைகள் நடந்து கொண்டிருந்த போது ஒரு வெளிப்புற பொறிமுறையை நிறுவுவதை இலங்கை நிராகரிக்கிறது எனக்குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam