யாழில் மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் சர்ச்சையை கிளப்பியுள்ள குளிர்பானங்கள்
யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்.உடுப்பிட்டி - மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேநீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரப் பிரிவு நடவடிக்கை
இதனைப் பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது அது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரப் பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



