பால் மா பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
தமிழ்-சிங்கள புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்க தயார்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத பால் மா மற்றும் அதன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனையின் போது, விற்பனைக்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான சுமார் 2,000 கிலோ பால் மா அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 80 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான பால் மா பொருட்கள், காலாவதியான இனிப்பு பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பொருட்களுடன் களஞ்சியசாலையின் உரிமையாளர் மற்றும் வர்த்தகர் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,