காங்கிரஸின் நிறைவு விழாவில் வெளியேற்றப்பட்ட சீன முன்னாள் தலைவர்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் நிறைவு விழாவில் இருந்து சீன முன்னாள் தலைவர் ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்பட்டுள்ளார்.
பலவீனமான தோற்றமுடைய 79 வயதான அவர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அருகில் அமர்ந்திருந்த நிலையில் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அதிகாரிகளால் வெளியேற்றம்
ஒரு வார கால மாநாட்டிற்குப் பிறகு, 69 வயதான ஜி ஜின்பிங்கின்னை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறை தலைவராக கட்சி உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த நிகழ்வு, மாவோ சேதுங்கிற்குப் பிறகு சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக அவரது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுக்கு இடையில் ஜனாதிபதியாக இருந்த ஹூ ஜின்டாவோ மேடையில் இருந்தபோது இரண்டு அதிகாரிகள் அவரை அணுகியுள்ளனர்.
இந்நிலையில், ஹூ ஜின்டாவோவை மேடையை விட்டு வெளியேறும்படி கேட்கின்றனர்.
சீன அரசாங்கம்
ஒரு கட்டத்தில், அவர் நகரத் தயங்கினார். அப்படியானால், ஏன் அதற்கு பின்னர் ஜி ஜின்பிங்கிடம் அவர் என்ன சொன்னார் போன்ற விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிய முயற்சி செய்கிறார்கள். எனினும் சீன அரசாங்கத்திடம் இருந்து இதுவரை பதில்கள் இல்லை.
ஹூ ஜின்டாவோவுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் இருப்பது அவர் வெளியேறுவதற்கான காரணமாக இருந்தால், இது ஏன் திடீரென்று நடந்தது, ஜி ஜின்பிங் கட்சியின் முன்னாள் தலைவரை நோக்கி திரும்புவதையும், முன்னாள் தலைவர் ஹூவின் இடதுபுறம், மூத்த பிரமுகர்களான லீ ஜான்{ மற்றும் வாங் {ஹனிங் ஆகியோர் கவலையுடன் இருப்பதையும் காணொளிக்காட்சி காட்டுகிறது.