இன்னும் இரண்டு நாட்களில் ஏலத்திற்கு வரவுள்ள விசித்திர பொருட்கள்!
பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்றே குறித்த கல்லை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.
ஏலம்
இதேவேளை செவ்வாய் கிரக கல்லுடன் சேர்த்து நியூயோர்க்கின் ஏல நிறுவனம், சிறிய டைனோசரின் என்புக் கூட்டையும் ஏலத்தில் விடவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு பொருட்களும், எதிர்வரும் 16ஆம் திகதி ஏலத்திற்கு வருகின்றன.
குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டைனோசரின் என்புக் கூடு
இதன் மேற்பகுதி, கண்ணாடி போன்று பளபளப்பாகக் காணப்படுகின்றது.
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது, அதிக வெப்பத்தால் எரிந்து இவ்வாறு உருமாறியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சிறிய டைனோசரின் என்புக் கூடு அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்தில் 1996ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப ஏல தொகையாக, இந்திய மதிப்பில் 3.3 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
