நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அடக்கு முறையை நோக்கமாகக் கொண்டது: சம்பிக்க ரணவக்க
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அடக்குமுறையை நோக்கமாகக் கொண்டது என்று சம்பிக்க ரணவக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(24.01.2024) நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வெளியிட்டுள்ளார்.
அந்நியச் செலாவணி
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த சட்டமூலமானது சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட ஒரு அடக்குமுறை சட்டமாகும்.
இதற்குப் பதிலாக அரசாங்கம் நாட்டின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் டிஜிட்டல் மயப்படுத்தல் ஊடாக அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் ஆனால் டிஜிட்டல் மயப்படுத்தல் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வதில் இந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் பாரிய தடைக்கல்லாக அமையும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |