ரணிலின் வருகையுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியாவின் நிதியுதவி அறிவிப்பு!
இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இந்தியாவின் ஏற்றுமதி நிதியளிப்பு வங்கியான எக்சிம் வங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான 1.3 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய எக்சிம் வங்கியின் நிர்வாக அதிகாரி ஹர்ஷா பங்கரி இதனை தெரிவித்தார்.
இலங்கை, தற்போது மோசமான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொள்கிறது.
எனவே திருப்பிச்செலுத்துவதை ஒத்திவைக்கும் வடிவத்தில் இது அமையலாம் என்று எக்சிம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் சமிஞ்சையை தமது வங்கி எதிர்பார்த்துள்ளதாக எக்சிம் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2021-22 ஆம் ஆண்டில் எக்சிம் வங்கி கடன்களில் 13 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
