பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Crime Death Law and Order
By Rukshy Apr 23, 2025 10:26 AM GMT
Report

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல், பதுளை நீதவான் நுஜித் டி சில்வா மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக இன்று (23) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

உடலை தோண்டி எடுக்கும் பணி காலை 9.30 மணியளவில் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து 11.40 மணியளவில் நிறைவடைந்தது.

டேன் பிரியசாத் கொலை விவகாரம்! மூன்று சந்தேக நபர்கள் கைது

டேன் பிரியசாத் கொலை விவகாரம்! மூன்று சந்தேக நபர்கள் கைது

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக..

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா கடந்த 9 ஆம் திகதி கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரிக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில் 3 பேர் கொண்ட மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Exhumation Body Of Nimesh Died In Police Custody

தலைமை தடயவியல் மருத்துவர் பிரியந்த அமரரத்ன, மூத்த சிறப்பு தடயவியல் மருத்துவர் பி.ஆர். ருவன்புர மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் வைத்தியர் முதித விதானபத்திரண ஆகியோர் நிபுணர் தடயவியல் மருத்துவ குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்

இளைஞனின் மரணம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனை திருப்திகரமாக இல்லாததால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த 3 பேர் கொண்ட நிபுணர் மருத்துவ குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

பல தரப்பினரின் எதிர்ப்பு 

குறித்த மனு உள்ளிட்ட முந்தைய விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Exhumation Body Of Nimesh Died In Police Custody

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்பட்டன, ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 1ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்த போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, மறுநாள் 02ஆம் திகதி அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக பல தரப்பினரின் எதிர்ப்பு எழுந்த சூழலில், சத்சரவின் பிரேத பரிசோதனையில் திருப்தி அடையவில்லை என்று அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக் குழுவில் ஷானி அபேசேகர..!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக் குழுவில் ஷானி அபேசேகர..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US