நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை சுலபமாக இல்லாதொழிக்க முடியாது : ராஜித சேனாரட்ன
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை சுலபமாக இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது குறித்து யாரும் காலக்கெடுகளை நிர்ணயிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றிய 1978 ஆம் ஆண்டில் இந்த முறையை இரத்து செய்யுமாறு கோரி அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிடம் தாம் அடி வாங்கியதாகவும், அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் தாம் மாறவில்லை எனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கத்தயார்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி ஆதரவளிக்கத் தயார் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதானால் ஏன் கோடிக்கணக்கில் செலவழித்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இருப்பினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படும் என தாம் நினைக்கவில்லை எனவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |