இலங்கையில் வீடுகளில் வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள்! கள ஆய்வு (Exclusive)
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்துடனேயே, எரிவாயு அடுப்பை பயன்படுத்துகின்றனர்.
நாட்டில் தற்போது விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு கலவையில் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், மக்கள் எரிவாயு சிலண்டர்களை கொள்வனவு செய்ய அச்சப்படுகின்றனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு விலையேற்றம் என்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், வரிசையில் நின்று மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன், எரிவாயுவை குறைந்த விலையில பெற்றுக் கொள்ள முடியாத பொது மக்கள் ஆர்ப்பாட்டத்திலும், ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில், தற்போது குறித்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவது பொதுமக்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றது.
இது குறித்து லங்காசிறி குழுவினராகிய நாம், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தோம். மக்களின் கருத்து காணொளியாக...

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
