தமிழக கடற்பரப்பில் கரையொதுங்கும் கஞ்சா பொதிகளால் ஏற்பட்டுள்ள பரபரப்பு(Photo)
தமிழக கடற்கரைகளில் கடந்த 15 நாட்களில் சுமார் 800 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் கரை ஒதுங்கியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கமைய, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்குவது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி சென்ற போது நடுக்கடலில் படகு மூழ்கியதில் படகில் இருந்த கஞ்சா பொதிகள் கடலில் விழுந்து கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
படகில் இருந்து கஞ்சா மூட்டைகள் கடலில் சிதறி விழுந்த போதிலும் படகில் சென்றவர்கள் படகை மீட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் என கண்டறிந்துள்ளனர்.
அவ்வாறு தப்பி சென்ற கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் தமிழக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடற்றொழிலாளர்கள் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனுஷ்கோடிக்கு அருகில் நேற்றைய தினம் 96 கிலோ கஞ்சாவை கடலோர பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றி அதனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதேவேளை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் வலையில் 30 கிலோ கிராம் கஞ்சா பொதி சிக்கியுள்ளது. அதனை கடற்றொழிலாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்காது தாம் விற்பனை செய்ய முற்பட்ட நிலையில் தகவல் அறிந்த பொலிஸார் கஞ்சாவை விற்க முயன்ற 7 கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திட்டில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர பாதுகாப்பு பிரிவினரால், மணல் திட்டில் இருந்து 110 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள அரிச்சல் முனை பகுதியில் கரையொதுங்கிய 80 கிலோ கிராம் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக செய்தி-தீபன்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 56 நிமிடங்கள் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
