இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்: இந்திய பிரதமர் உறுதி!
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் குணவர்தனவுக்கு இன்று அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம், மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, விரைவான பொருளாதார மீட்சியை காணும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பு
நம்பகமான நண்பராகவும், நெருங்கிய அண்டை நாடாகவும், இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கைக்கு வரும் நிலையில் இந்தியா, இலங்கையிடம்
அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே பிரதமர் மோடியின்
அறிவிப்பு வெளியாகியுள்ளது.