7.2ஐ கடந்துள்ள கோவிட் - 19 தொற்று வீதம்
இலங்கையில் நேற்று 878 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், கோவிட் - 19 தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து முதல் தடவையாக தொற்று வீதம் 7.2ஐ கடந்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்று மாத்திரம் 12145 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனவரி மாதத்தில் 3 வீத அதிகரிப்பை காட்டியது. இது இப்போது 6 வீதமாக உயர்ந்துள்ளது.
அது இப்போது 7 வீதமாக உயர்ந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது அபாயகரமான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.