புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வுப் பணி! - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் பல முயற்சிகளுக்குப் பின்னும் எதுவும் கிடைக்காததால் இடைநிறுத்தப்பட்டது.
அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் ஆர்.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தங்கத்தை மீட்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பொலிஸாரால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நவம்பர் 25ம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் பல தடவைகள் பிற்போடப்பட்டது.
இதன்படி, முல்லைத்தீவு நீதவான் மேற்பார்வையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகழ்வு பணிகள் டிசம்பர் 6ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
