குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (09.03.2025) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபன் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமான வழக்கு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அகழ்வு பணி
இந்த வழக்கிலே ஒரு முன்னேற்றத்தை நாங்கள் அடைந்திருக்கின்றோம். இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வு பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணம் வருவதற்கு சில காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும், ஒரு தடையான காரணமாக இருந்தது.

அதனடிப்படையில் இப்பொழுது காலநிலை சரியாக இருக்கின்ற நேரத்தில் அதற்கான பணமும் ஒதுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலே அதற்கு செலவழிக்கின்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அந்த சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு எதிர்வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் உத்தரவிட்டு இருக்கின்றார்.
இலங்கையர்களுக்கு அதிகரிக்கும் சுமை! எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
நீதி
இதுசம்பந்தமான சட்டவைத்திய அதிகாரிகள் அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி அவர்களால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே எதிர்வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் திகதி யிலிருந்து முதல் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியிலே அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதனை நீதிமன்றங்கள் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
விவாகரத்து வழக்கில் ரோஹினியை சிக்க வைக்க மனோஜிற்கு கிடைத்த வீடியோ, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam