செம்மணி அகழாய்வு பணிகள்: அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழாய்வு பணிகள் இன்று(19.7.2026) நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.
இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 434 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு பணிகள்
மேலும், இன்று 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற 2ஆம் கட்ட அகழாய்விலும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam