செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பம்: சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா

Jaffna Sri Lanka Law and Order chemmani mass graves jaffna
By Theepan Apr 08, 2026 04:01 AM GMT
Report

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பிலான சாத்தியங்களை தீர்மானிப்பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி குறித்த வழக்கு அழைக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் காணிகள் மக்களுக்கே! இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

மக்களின் காணிகள் மக்களுக்கே! இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இடம்பெற்ற போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவநாதன், அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான வேலைகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளதாக அறிவித்திருந்த நிலையிலும், ஏற்கனவே பெப்ரவரி 12ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இருந்து நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாதீடானது இன்று வரை அனுமதி வழங்காத நிலையில் காணப்படுவது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பம்: சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா | Excavation Work At Chemmani Mass Grave Soon

கடந்த தவணையின் போது அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி என உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய திகதியில் ஆரம்பிக்க முடியாத சூழல் இருப்பதாக நீதிமன்றத்தினுடைய அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அடுத்த கட்ட அகழ்வு பணி கிட்டத்தட்ட 27ஆம் திதி தற்காலிகமாக ஆரம்பிக்கப்படலாம் என்ற கலந்தாலோசனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோடு அது தொடர்பான விடயத்திற்கு பாதீடு தயார் நிலையில் உள்ளதா இல்லையா என்பதை ஆராய மீண்டும் வழக்கு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கான அனுமதி

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குறித்த புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதியை கோரப்பட்டிருந்த நிலையில், அவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக அல்லது மாலை இரண்டு மணிக்கு பின்னராக குறித்த புதைகுழியை தரிசனம் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

நிச்சயமாக எந்த நேரத்தில் அவர்கள் விஜயம் செய்ய உள்ளார்கள் என்ற விடயத்தை முற்கூட்டியே நீதிமன்றத்தில் அறிவிக்கும் படியும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பம்: சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா | Excavation Work At Chemmani Mass Grave Soon

எதிர்வரும் 27ஆம் திகதி அகழ்வு பணி ஆரம்பிக்கிறதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்கு 21ஆம் திகதி குறித்த வழக்கு அழைக்கப்படும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புகளை ஆய்வு செய்வதற்கான பாதீடும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீடும் இரண்டும் ஒரேயடியாக அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டுக்குமே அனுமதி இன்னும் அளிக்கப்படாத நிலைமையில் இருக்கிறது என்றும் அதில் மனித எலும்புகளின் ஆய்வுக்கான பாதீட்டில் சிறிய திருத்தம் செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இரண்டையும் சேர்த்து அனுமதி வழங்க வேண்டி சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் என்றார்.

குறித்த வழக்கு விசாரணைகளின்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, காணாமல் போனார் பற்றிய அலுவலக சட்டத்தரணி பூரணி மரியநாயகம்,காணாமல் போனார் பற்றிய அலுவலக பிரதிநிதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார், முறைப்பாட்டாளர்கள், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமெரிக்க வங்கிகளில் இருந்த தொன் கணக்கான தங்கம் விற்பனை: பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம்!

அமெரிக்க வங்கிகளில் இருந்த தொன் கணக்கான தங்கம் விற்பனை: பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம்!

ஈரான் போரில் ட்ரம்புக்கு செக்! ஈரானை அழிக்க திரைமறைவில் பெரும் சதி

ஈரான் போரில் ட்ரம்புக்கு செக்! ஈரானை அழிக்க திரைமறைவில் பெரும் சதி


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US