செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கிற்கான திகதி அறிவிப்பு
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(07.04.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று(07) அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே யாழ்ப்பாண திறந்த நீதிமன்றத்தில் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri