விடுதலைப் புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க ஆபரண புதையல் தொடர்பில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ஆம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று(19.02.2024) அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியாருக்குச் சொந்தமான காணி
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு - குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் இன்று பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீதவான், கிராம சேவையாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan