பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விளக்கம் கோரும் ஆளுநர் செயலகம்! (Photos)
சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வாசலில் வைக்கப்பட்ட தொண்டமனாறு வெளிக்கள நிலையப் பரீட்சை வினாத்தாள்கள் உள்ளடக்கிய பொதி தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வாசலில் வைக்கப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் பாடசாலை தவணை பரீட்சைக்கான வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு முன்னால் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வடமாகாண ஆளுநர்
செயலகத்தால் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
