சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் வாசலில் வீசப்பட்டிருந்த பரீட்சை வினாத்தாள்: மக்கள் விசனம்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெறும், தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் நடத்தும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் முன்வாசலில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விசனம்
இது தான் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வினாத்தாள் கையளிக்கும் நடைமுறையா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இவ்வாறு வினாத்தாள்கள் வீசப்பட்டு உள்ளமை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரனிடம் வினவிய போது "இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறவில்லை எனவும், இந்த விடயத்தினை வலயக் கல்வி பணிப்பாளருக்கு தெரியப்படுத்துமாறும்" தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வலயக்கல்வி பணிப்பாளர் ரவீந்திரனிடம் தொடர்புகொண்டு வினவியபோது "வினாத்தாள்களை கொண்டு சென்றவர் பரீட்சை வினாத்தாள்கள் அதிபரிடம் தான்
கையளித்ததாகவும் இவ்வாறு வீசப்படவில்லை" எனவும் தனக்கு தெரியவந்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளார். அத்துடன் இது சம்பந்தமாக ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri