புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
கோவிட் - 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு கோவிட் - 19 தொற்று நிலைமையால் 6 மாதங்களின் பின் முழுமையாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 8ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
- 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை - 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி
- கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை - 2022 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 2022 மார்ச் மாதம் 05ஆம் திகதி வரை
- கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை - 2022 மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 2022 ஜுன் மாதம் முதலாம் திகதி வரை
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam