பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய அதிரடி நடவடிக்கை
தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் நாட்களில் பல அதிரடி சம்பவங்கள் இடம்பெறவுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோப்புக்களை அநுர அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
முறைகேடுகள்
அதற்கமைய கடந்த அரசாங்கங்களின் போது உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் குழுவின் முறைகேடுகள் குறித்த பல விசாரணைகள் தற்போது அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசுவாசமாக செயற்பட்ட செயலாளர்கள், மற்றும் அமைச்சின் செயலாளர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் மற்றும் மோசடி
தகுந்த ஆதாரங்களுடன் சட்ட ரீதியான முறையில் அவர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் பல்வேறு நபர்களை கைது செய்வதற்கான இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஆட்சிகளின் போது ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
