பாதாள உலகக் குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தொடர்பு! பகிரங்கப்படுத்திய அநுர தரப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, ‘கோனவல சுனில்’ என்ற பாதாள உலக உறுப்பினரை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கற்கள் வீச வைத்தார்,” என அவர் தெரிவித்துள்ளார்.
சஜித்திற்கு ஒரு கோரிக்கை...
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, பாதாள உலக தலைவர்களை வழிநடத்தி, ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவை கடத்திச் சென்று படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில், ரிச்சர்ட் டி சொய்சா பற்றிய ‘ராணி’ திரைப்படம் வெளியிடப்பட உள்ளது எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த திரைப்படத்தை ரகசியமாக பார்வையிட்டு, அவருடைய தந்தை ஜனாதிபதி பதவியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறியுமாறு கோருவதாக சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜுலம்பிட்டியே அமரே மற்றும் வம்பொட்டா போன்ற பாதாள உலக உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜுலம்பிட்டியே அமரே, ஒருகாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் பாதுகாப்பாளராகவும் பணியாற்றினார்,” என சுனில் வடகல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
