முன்னாள் அரசியல்வாதியின் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல்
பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை ஹெட்டமுல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறே காரணம்

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேருவளை ஹெட்டமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கு காரணம் என பேருவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri