விசாரணைக்காக அழைக்கப்பட்ட முன்னாள் போராளி சிஐடியினரால் கைது
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணை
அவர், கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அன்றைய தினம் அவர் வாக்குமூலம் வழங்கச் செல்லாத காரணத்தால் நேற்று (26.03.2024) மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அவர் பதிவிட்டிருந்தார் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
https://tamilwin.com/article/former-political-prisoner-called-for-inquiry-1710147238 |
மேலதிக தகவல் - திலீபன்
அமெரிக்காவிலிருந்து கொழும்பு நோக்கிய பயணம் : விபத்து சம்பவிப்பதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |