சீன தூதரை சந்தித்த இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர்
இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகரும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனருமான மிலிந்த மொரகொட, இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹோங்கைச் சந்தித்து, சீன - இலங்கை உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்துள்ளார்.
தூதர் கி யின் இல்லத்தில் நடைபெற்ற மதிய உணவு விருந்தின்போது, இரு தரப்பினரும் இந்த விவாதிப்பை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கலந்துரையாடல்
உலகளாவிய நிலைமை, சீன-இலங்கை உறவுகள், சீன முதலீட்டாளர்களுக்கான இலங்கையில் முதலீட்டுச் சூழல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் சீன-இலங்கை ஒத்துழைப்பு ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மொரகொட, தூதர் கி யிடம் விளக்கினார்.
அத்துடன்,தெற்காசியாவுடன் பொதுவாகவும், குறிப்பாக இலங்கையுடனும் தொடர்பு கொள்ள ஆர்வமுள்ள சீன நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற, தமது அறக்கட்டளையின் விருப்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri