முன்னாள் இராணுவ தளபதி லயனல் பலகல்ல காலமானார்
முன்னாள் இராணுவத் தளபதி லயனால் பலகல்ல காலமானார்.
கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெனரல் பலகல்ல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் அஞ்சலி
அன்னாரின் பூதவுடன் கடுவெல கொட்டெல்லவெல பகுதியில் அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பலகல்ல இலங்கை இராணுவத்தின் பதினாறாவது படைத்தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ தளபதி
அவர் கடந்த 2000 முதல் 2004ஆம் ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக கடமையாற்றியுள்ளார்.
ஜெனரல் பலகல்ல கூட்டுப் படைகளின் பிரதானியாகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இடம்பெற்ற காலத்தில் லயனல் பலகல்ல படைத்தளபதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
