ஆளும் கட்சி அமைச்சரின் பொய்யான சொத்து விபரம்..! அம்பலமாகும் உண்மை
தனது சொத்து தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் பொய் கூறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
யாப்பஹுவ தொகுதியின் மாலிய பிரிவில் சர்வஜன சபை அமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நானும் கோட்டை பகுதியில் வசிக்கிறேன். கோவிட் காலத்தில் எனது நிலத்திற்கு அருகில் ஒரு சிறிய நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தின் ஒரு பெர்ச் 4 மில்லியன் ரூபாய் ஆகும்.
பொய்யான அறிக்கை
அந்த நிலத்துக்கு அருகாமையில் உள்ள ஒரு நிலத்தை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் வாங்கியுள்ளார்.
அவர் அதன் விலை ஒரு பெர்ச்சுக்கு 3 இலட்சம் என அறிக்கைப்படுத்தியுள்ளார். இந்த பொய்யான அறிக்கையை வைத்து அவரை சிறைக்கு அனுப்ப முடியும்.
ஊழலுக்கு எதிராக உண்மையாக போராடக்கூடிய ஒரு அரசியல் இயக்கம் நாட்டுக்கு தேவை. சர்வஜன அதிகாரமே அந்த இயக்கமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




