ஜனாதிபதி இருப்பதால் அனைவரும் புள்ளி போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றனர் - சபாநாயகர்
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருப்பதால், அனைவரும் புள்ளி போட்டுக்கொள்ள கதைப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று சிரித்தவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் புள்ளிகளை போட்டுக்கு கொள்ள முயற்சிப்பதாகவும், மற்றைய நாட்களின் நாடாளுமன்றத்திற்கு வருகை தராதவர்களும் இன்று வருகை தந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்ற அவைக்கும் இருக்கும் போது வங்கி திருடன், வங்கி, கொள்ளையர்கள், 8 ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமிந்த விஜேசிறி மற்றும் ஹேசா விதாரண ஆகியோர் ஆளும் கட்சியினரை சாடி உரையாற்றியுள்ளனர்.




