அனைவரும் ரணில் பக்கமே; அடுத்து ஐ.தே.க. ஆட்சி உறுதி: அகிலவிராஜ் நம்பிக்கை!
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர் என்றும் அடுத்த ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலேயே மலரும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், "சிங்கப்பூரை லீகுவான் மீட்டெடுத்தார்.
மலேசியாவை மகாதீர் முகமது கட்டியெழுப்பினார். தனிநபர்களின் தூரநோக்கு சிந்தனைக்குப் பின்னால் அனைவரும் திரண்டனர். தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் அனைவரும் திரண்டுள்ளனர்.
எனவே,
அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆதரவு வழங்குவார்கள்.
ஐ.தே.க. தலைமையிலேயே புதிய ஆட்சி மலரும்" எனத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
