மைத்திரியை கண்டு அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
தற்போது நாட்டின் மாற்றம் தெளிவாக தெரிவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை எனது பணிக்காலம் மோசமாக இருந்தது என்று கூறினார்கள். எனக்கு எதிராக எப்படி எல்லாம் பேசினார்கள். இப்போது வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நிலை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
ஈஸ்டர் தாக்குதல்
நாட்டிற்கு நிலையான அரசாங்கம் தேவை. அதுதான் முதல் விடயமாக உள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
எனது சொத்துக்கள் குறித்த அறிக்கையை அளித்துள்ளேன். எல்லாற்றிலும் நான் சிக்கிக்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு அரசாங்கமும் உங்களைப் பார்த்து பயப்படுவதாகத் தெரிகிறதா? என அவரிடம் வினவிய போது என்னை பார்த்தால் அனைவருக்கும் பயம் தான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.